கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது ரொம்ப முக்கியமா? - கடுப்பு காட்டிய உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 01:10 pm
sc-refuses-to-consider-karthi-chidambaram-s-urgent-plea

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மற்ற வழக்குகளைக் காட்டிலும், அவர் வெளிநாடு செல்வது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றது உச்சநீதிமன்றம்.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு, ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறது. இதனால், உச்சநீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தாலி, ஆஸ்திரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு 3ம் தேதியில் இருந்து கார்த்தி சிதம்பரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகவும், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் யு.யு.லலித், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது, கார்த்தியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதிகள் பதில் அளிக்கையில், “வெளிநாட்டுக்கு போக வேண்டாம். இந்தியாவிலேயே இருக்கட்டுமே. மற்ற வழக்குகளைக் காட்டிலும், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல. நீதிபதிகள் கையாள முடிவதைக் காட்டிலும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது நாளையே விசாரிக்கப்பட வேண்டிய விஷயமல்ல. மக்கள் வெளிநாடுபோவதும், வருவதுமாக இருப்பார்கள். அதைப்பற்றி நீதிமன்றத்துக்கு என்ன கவலை இருக்க முடியும்’’ என்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close