உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 11:32 am
supreme-court-4-new-judges-take-oath

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்ட ஹேமந்த் குப்தா, சுபாஷ் ரெட்டி, முகேஷ் குமார் ரஷிக்பாய் ஷா, அஜய் ரஸ்தோகி ஆகிய நான்கு பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த நால்வருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட 4 நீதிபதிகளுடன் சேர்த்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய எண்ணிக்கை 28க உள்ளது. மொத்தம் 31 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்ற நிலையில், இன்னும் 3 இடங்கள் காலியாக உள்ளன. 

நீதிபதி ஹேமந்த் குப்தா மத்தியப் பிரதேசத்திலும், நீதிபதி சுபாஷ் ரெட்டி குஜராத்திலும் நீதிபதி முகேஷ் குமார் ரஷிக்பாய் ஷா பாட்னாவிலும், நீதிபதி ரஸ்தோகி திரிபுராவிலும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் ஆவர். அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்வதற்கு, கொலீஜியம் குழு கடந்த 29-ம் தேதி பரிந்துரை செய்தது. இரண்டே நாள்களில் மத்திய அரசு அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது 4 நீதிபதிகளும் பதவியேற்றுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close