ஆங்கிலத்தில் கூட பேச முடியாதா? நீதிபதியை விளாசிய தலைமை நீதிபதி கோகாய்

  Padmapriya   | Last Modified : 03 Nov, 2018 03:47 pm
in-supreme-court-you-must-speak-in-english-cji-ranjan-gogoi-tells-judge-after-hearing-him-argue-in-court-in-hindi

உச்ச நீதிமன்ற பேசுவது இந்தியில் இருக்கலாம் ஆனால், நீதிபதியின் உத்தரவுகள் வழக்காடல்கள் யாவும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் நீதிமன்ற நடவடிக்கையின் போது கூடுதல் மாவட்ட நீதிபதி ஒருவரிடம் தெரிவித்தார். 

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, கூடுதல் மாவட்ட நீதிபதி ஒருவர் பேசும்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் இவ்வாறு கூறினார். அப்போது பேசிய கோகாய், ''கூடுதல் நீதிபதி ஒருவர் இந்தியில் உரையாடுவது எனக்கு அதிர்ச்சியாய் உள்ளது. நீதிபதியாக இருக்கும் உங்களால் ஆங்கிலத்தில் உரையாட முடியாதா? ''என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த அந்த நீதிபதி தனக்கு ஆங்கிலம் தெரியாது எனக் கூறினார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், ''உச்ச நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களில் மாநில அல்லது பிற மொழிகளில் பேசவோ அல்லது வாதாடவோ அனுமதி இருக்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடல் அனைத்துமே ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டம்  348ன் படியான வழிமுறை'' என்று தெளிவுபடுத்தினார். 

மொழிப்பெயர்ப்பு...

இதனிடையே உச்ச நீதிமன்றம் மற்றும் மற்ற நீதிமன்றங்களின் முக்கிய உத்தரவுகள் இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி முதல் ஒரு வார கால விடுமுறை உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்படவுள்ளது. இதையொட்டி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, நீதிமன்ற முக்கிய தீர்ப்புகளை இந்தி மொழியில் மொழி பெயர்க்க திட்டமிட்டுள்ளோம். இருப்பினும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதலுக்கு பின்னரே மொழிபெயர்ப்பு பிரதி வெளியிடப்படும்.

இதனை அமைப்பதற்காக வல்லுனர் குழு ஒன்று ஏற்படுத்தப்படும். அவர்கள் மொழி பெயர்ப்பு பணிகளை மேற்கொள்வார்கள். சட்டத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள் இந்த குழுவில் இருப்பார்கள் என்று கோகாய் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close