வரலாறு காணாத வேகம்.......உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் 4 நீதிபதிகள்

  Padmapriya   | Last Modified : 04 Nov, 2018 08:51 am
cji-in-awe-as-centre-clears-elevation-of-4-sc-judges-in-48-hours

உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். இதயனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 24 லிருந்து 28ஆக உயர்ந்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் வெள்ளிக்கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்த வந்த ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான நான்கு நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, ஒப்புதல் வாங்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் நேற்று முன் தினம் இதற்கு ஒப்புதல் வழங்கினார்.  

இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 2ஆம் தேதி காலை 10:30 மணிக்கு புதிய நீதிபகள் பதவியேற்பு விழா நடந்தது. அந்த நான்கு பேருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் பதிவேற்றதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 24 லிருந்து 28ஆக உயர்ந்துள்ளது. பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் இதுகுறித்து, ”வரலாற்றில் இல்லாத வேகத்தில் அதுவும் 48 மணி நேரத்திற்குள் கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டது, எனக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close