ஆர்.கே.நகர் வழக்குகள்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

  டேவிட்   | Last Modified : 09 Nov, 2018 01:06 pm
tn-government-to-answer-superme-court

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தொடரப்பட்ட வழக்குகள் குறித்து தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது தொடரப்பட்ட வழக்குகள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்தும் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல்களில் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் கருப்புப் பணத்தை பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஆந்திர பிரதேச மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மனுத் தாக்கல் செய்தார். அதில் தற்போதைய 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை குற்றச் செயலாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் கைப்பற்றப்பட்ட பணம், மதுபானங்கள் ஆகியவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம்  மாநில அரசுகள் ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதில் ஆர்.கே.நகர். தொகுதி இடைத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இது குறித்து பதில் அளிக்குமாறு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close