அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 04:30 pm
alok-verma-s-report-was-filed-in-the-supreme-court

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மீதான குற்றசாட்டு குறித்த விசாரணை அறிக்கையை மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா லஞ்சம் வாங்கியதாக ராகேஷ் அஸ்தானா புகார் தெரிவித்தார். இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்தது.  மேலும், இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம் மறுவிசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close