ரஃபேல் விலை விவரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 09:09 am
govt-submitts-rafael-price-details-to-supreme-court

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது. மிகவும் ரகசியமானது என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்ட அந்த விவரங்களை, மூடி முத்திரையிட்ட கவரில் எடுத்து வந்த பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள், உச்சநீதிமன்ற செயலாளர் ரவீந்திர மைதானியின் அலுவலகத்தில் அதனை நேற்று சமர்ப்பித்தனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த ஆவணங்களின் விவரங்கள், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரெல் கே.கே.வேணுகோபாலுக்கு கூட காட்டப்படவில்லை. அந்த அளவுக்கு, விலை விவரங்கள் ரகசியமானவை என்பதை மத்திய அரசு உணர்த்தியுள்ளது. மூடி முத்திரையிடப்பட்ட கவரில் இருக்கும், ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவரங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் அவருடன் வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருக்கும் பிற நீதிபதிகளும் மட்டுமே தெரிந்து கொள்ள இயலும்.

முன்னதாக, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், அதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது விலை விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close