சபரிமலை சீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 02:13 pm
sabarimala-can-not-be-urgently-asked-for-a-review-petition-supreme-court

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் பல தரப்பினரும் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். சபரிமலை விவகாரத்தில் தொடுக்கப்பட்ட 49 சீராய்வு மனுக்கள் மீது, உச்சநீதிமன்றம் நேற்று விசாரணை மேற்கொண்டது. அப்போது, மனுக்களை ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் 22ம் தேதி, அவற்றை விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது. ஆனால், அதுவரை, சபரிமலை விவகாரத்தில் செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக எவ்வித இடைக்கால தடையும் வழங்க முடியாது என குறிப்பிட்டது.

இந்நிலையில், நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளதால், இந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை தொடர்பான சீராய்வு மனு ஜனவரி 22ம் தேதி விசாரிக்கப்படும். அதற்கு முன் இது தொடர்பான எந்த மனுவையும் விசாரிக்கவோ, தடை விதிக்கவோ முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close