ரஃபேல் வழக்கு: விமானப்படை அதிகாரிகள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 03:44 pm
at-rafale-hearing-2-iaf-officers-take-questions-from-court

டெல்லி: ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில், இந்திய விமானப்படை அதிகாரிகள் இருவர் நேரில் ஆஜராகி கருத்து கூறும்படி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதத்தை முன்வைத்தார். 

அவர், "மனுதாரர்கள் பாதுகாப்பு துறை வல்லுனர்கள் கிடையாது. அவர்களுக்கு ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை விபரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை' என்று கூறினார். மேலும், முதலில் போடப்பட்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தை விட, இப்போது, 40% அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது தலைமை நீதிபதி, இந்திய விமானப்படையில் இருந்து அதிகாரிகள் யாராவது நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கே.கே.வேணுகோபால், 'முன்னதாக விமானப்படை  அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்' என்று குறிப்பிட்டார். 

பின்னர், விமானப்படை தொடர்பான வழக்கு என்பதால் அவர்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். 

இதனால் அடுத்த விசாரணையில் விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close