சபரிமலையில் போராட்டம் நடத்த தடை: கேரள உயர்நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 04:20 am
kerala-high-court-rules-to-stop-protests-in-sabarimala

சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, சபரிமலை கோவிலில் போராட்டங்கள் நடத்த தடைவிதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசாரின் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் உத்தரவிட்டதை, தொடர்ந்து கேரளா முழுவதும் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.

தொடர் போராட்டங்களுக்கு இடையே, சபரிமலை பகுதியில் கேரள அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சபரிமலை கோவிலில் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு போலீசார் சோதனைகள் நடத்த வேண்டும் என்றும், பக்தர்கள் ஐயப்ப கோஷங்கள் எழுப்புவதற்கும், பாடுவதற்கும் அனுமதிக்க வேண்டும், என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், போலீசாரின் தடைகளை தளர்த்த நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

10-50 வயது வரையிலான பெண்களை கோவிலுக்குள் பத்திரமாக அனுப்பி வைக்க என்ன திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் நீதிபதிகள் கேரள அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close