தேவசம் போர்டு ஆணையர் இந்துவாக தான் இருக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி 

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 01:36 pm
only-a-hindu-can-be-made-devaswom-commissioner-rules-kerala-high-court

திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டுகளின் ஆணையர்களாக இந்துக்களை மட்டும் தான் நியமிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் 3,000 கோவில்களை நிர்வகிக்க ஐந்து தேவசம் போர்டுகள் உள்ளன. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சி, கூடல் மாணிக்கம் என 5  தேவசம் போர்டுகள் மொத்தமாக செயல்பட்டு வருகின்றன. இதில், திருவிதாங்கூர் - கொச்சி இந்து மத நிலையங்கள் சட்டம் - 1950ல் சமீபத்தில் ஒரு திருத்தத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார். 

அதன்படி, இந்த திருவிதாங்கூர் போர்டுகளின் கமிஷனராக இந்து அல்லாதவரையும் நியமிக்க முடியும் என்ற திருத்தம் ஏற்பட்டது.  கேரள அரசு மேற்கொண்ட இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 

இதன் மீதான மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ராமசந்திர மேனன், தேவன் ராமசந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறபித்த உத்தரவில், இரண்டு தேவசம் போர்டுகளின் ஆணையர் என்பவர் இந்துமதத்தை பின்பற்றுபவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close