ஊழல் குற்றஞ்சாட்டப்படும் அரசு அதிகாரிகளை விசாரிக்க முன் அனுமதி தேவையா?

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 05:58 pm
corruption-scandal-supreme-court-ordered-to-central-government

லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அரசு அதிகாரிகளை விசாரிக்க, மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச,ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அரசு அதிகாரிகளை விசாரிக்க, சிபிஐ மத்திய அரசின் முன் அனுமதியை பெற வகை செய்யும் விதத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. இந்த சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷன்முன்வைத்த வாதம்: லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் மத்திய அரசு அதிகாரிகள், அலுவலர்களை விசாரிக்க, மத்திய அரசின் முன் அனுமதி பெற வகை செய்யும் விதத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 17 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது. மாறாக இச்சட்டத் திருத்தத்தை செயல்படுத்தினால் அது லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு ஆளும் அரசு அதிகாரிகளை காப்பாற்றுவதாக ஆகிவிடும்.


இதுதொடர்பாக கடந்த 1998-ஆம் ஆண்டு,  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதையடுத்து,தில்லி சிறப்பு  காவல்படை அமலாக்க சட்டத்தின் 6 ஏ பிரிவின்கீழ் மீண்டும் இந்த அம்சம் வலியுறுத்தப்பட்டது. அதில், இணைச் செயலர் மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர மத்திய அரசின் முன் அனுமதி தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சட்டப் பிரிவையையும் உச்சநீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், அரசு அதிகாரிகளை காப்பாற்றும் வகையில் தற்போது மீண்டும் அந்தச் சட்டப்பிரிவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என பிரஷாந்த் பூஷன் வாதிட்டார். அவரது வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு,இதுதொடர்பாக மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close