ஜம்மு-காஷ்மீர் பேரவை கலைப்புக்கு எதிரான மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 01:47 pm
sc-refuse-a-plea-against-j-k-assembly-dissolution

ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப்பேரவையை கலைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை கடந்த மாதம் கலைக்கப்பட்டது. ஆளுநர் சத்யபால் மாலிக்கின் இந்த முடிவை எதிர்த்து, பாஜக எம்எல்ஏ காகன் பகத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா திங்கள்கிழமை முன்வைத்த வாதம்:
மாநில சட்டப்பேரவையை ஆளுநர் கலைத்தபோதும், அடுத்து ஆட்சியமைக்க உரிமைக் கோரி அவரிடம் இரண்டு கடிதங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அதனை அவர் கருத்தில் கொள்ளவில்லை. 

ஒரு மாநிலத்தில் ஆட்சியை கலைக்கும் முன், அங்கு புதிதாக வேறு ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை ஆளுநர் தீவிரமாக ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமது முந்தைய தீர்ப்புகளில் கூறியுள்ளது என அவர் கூறினார்.

இருப்பினும், ஆளுநரின் முடிவில்  நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறிய, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை ஏற்க மறுத்துவிட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close