நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 12:26 pm
banned-to-sell-drugs-online

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின்றி வழங்கப்படுவதாகவும், இதனால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாகவும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜேந்திர மேனன், வி.கே.ராவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்தனர். மேலும் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கனவே, ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் மருந்து விற்பனை சங்கத்தினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close