இந்தியாவை ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் : மேகாலயா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 05:08 pm
india-should-have-been-declared-a-hindu-nation-meghalaya-high-court

தேசப்பிரிவினையின்போதே இந்தியா, ஹிந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று  மேகாலயா உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தனக்கு இந்திய குடியுரிமை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, அமோன் ரானா என்பவர் தொடர்ந்த வழக்கு  மேகாலயா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.சென் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு:

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவில் வாழ விரும்பி வரும் ஹிந்துக்கள், சீக்கியர்கள்,  ஜெயினர்கள்,  பார்சிகள் உள்ளிட்ட பல்வேறு மதங்கள், இனங்களை சேர்ந்தவர்களிடம் எந்த கேள்வியையும், ஆவணங்களை கேட்டாமல், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

மேலும் அவர்கள், நாட்டில் தாங்கள் விரும்பும் எந்தப் பகுதியிலும் அமைதியும், கண்ணியத்துடனும் வாழ உடனே வழிவகை செய்து கொடுக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் பூர்வீக இந்தியர்களின் குடியுரிமை விவகாரத்திலும் இதே வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற பிரதமர்,  மத்திய சட்ட மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் ஆவன செய்ய வேண்டும்.

தேச சுதந்திரத்தின்போது இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான், தன்னை இஸ்லாமிய தேசமாக அறிவித்து கொண்டது. ஆனால், மதத்தின் பெயரால் தொடர்ந்து பிரிவினையை சந்தித்து வரும் இந்தியா இன்னமும்  தம்மை மதச்சார்பற்ற நாடாக சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஆனால், தேசம் சுதந்திரம் அடைந்தபோதே, இந்தியா ஹிந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close