ரஃபேல் விவகாரம்: விசாரணை எதுவும் தேவையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 11:18 am
rafale-no-need-to-enquiry-sc

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமானப் படைக்கு பிரான்ஸிடமிருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் அதன் விலையை உயர்த்தியது, உதிரி பாகங்கள் தயாரிப்புப் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, மத்திய அரசு மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், இந்த ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி. மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

மனுதாரர்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கான முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கருதுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆகவே, ரஃபேல்  ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close