ரஃபேல் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? முழு விவரம்...

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 02:48 pm
no-wrongdoing-in-rafale-deal-supreme-court

பிரான்ஸ் நாட்டுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது, என்று இதுதொடர்பாக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோஸஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் அறிவித்துள்ளனர். 

அதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து தொடுக்கப்பட்டிருந்த பொதுநல வழக்குகளை விசாரணை செய்வதற்கு முகாந்தரமில்லை என்று கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது. மேலும் விமானத்தை விலைக்கு வாங்குவது தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் எவ்வித விதிமீறல்களிலும் நடைபெறவில்லை எனவும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்ட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனத்துக்கு ரஃபேல் போர் விமானத்தை தயாரித்துவரும் டஸால்ட்  நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள பணியானையிலும் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மிகவும் வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றியே இருநாட்டு அரசுகள் மற்றும் டஸால்ட்  - அம்பானி நிறுவனங்களுக்கிடையேயும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாருக்கும் வரத்தக ரீதியாக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சிலரின் கண்ணோட்டத்தை திருப்திபடுத்த வேண்டுவென்று, நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு அமைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ரஃபேல் போர் விமானத்தின் விலை குறித்த அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுவது முறையானதாக இருக்காது எனவும், முறைப்படி சரியாக செய்யப்பட்டுள்ள விஷயத்தின் மீது விசாரணை  மேற்கொள்கிறோம் என்ற பெயரில் இழுத்தடிப்பது சரியானதாக இருக்காது என, ரஃபேல் ஒப்பந்த விவாகரம் தொடர்பாக விராணைக்குழு அமைக்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close