இடைத்தரகர் கிறிஸ்டியனை வெச்சி செய்யும் சிபிஐ!

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 05:59 pm
agusta-westland-christian-michel-s-cbi-custody-extended

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் முறைகேடு விவகாரத்தில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலின் சிபிஐ காவலை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 4 -ஆம் தேதி இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வரப்பட்டார். அவரின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை சிபிஐ அதிகாரிகள் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் குறித்து  கிறிஸ்டியனிடம் மேலும் விசாரணை நடத்தவும், அவரை மும்பைக்கு அழைத்துச் செல்லவும் வேண்டியுள்ளது என சிபிஐ தரப்பு வழக்குரைஞர் நீதிபதியிடம் எடுத்துக் கூறினார். இதற்கு கிறிஸ்டியன் மைக்கேல் தரப்பு வழக்குரைஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேலின் சிபிஐ காவலை மேலும் நான்கு நாட்களுக்கு அதாவது வரும் 19 -ஆம்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close