போச்சு...இடைத்தரகர் கிறிஸ்டியனுக்கு மறதி நோயாம்! 

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 11:44 am
middle-man-christian-move-to-bail

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு  வழக்கில், சிபிஐ காவலில் உள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் உடல்நிலை பலவீனமாக இருப்பதால், அவருக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என  அவர் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மேலும் அவர், மறதி நோயால் (டிஸ்லெக்ஸியா) அவதிப்பட்டு வருவதாவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சிபிஐ காவல் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது அவர் தரப்பு வழக்குரைஞர் அல்ஜோ கே. ஜோசஃப் முன்வைத்த வாதம்:

சிபிஐ வேண்டுகோளின்படி, கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் ஏற்கெனவே 5 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவரிடம் சிபிஐ 5 முறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், டெல்லியில் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் காரணமாக அவரின் உடல்நிலை பலவீனமடைந்துள்ளது. மேலும், அவர் டிஸ்லக்சியா எனும் மறதி நோயால் அவதியுற்று வருகிறார்.

 விசாரணைக்கு கிறிஸ்டியன் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிறருக்கு  ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கிறிஸ்டியன் மைக்கேலுக்கும் ஜாமீன் அளிக்க வேண்டும் என ஜோசஃப் தெரிவித்தார்.

இதற்கு சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close