2018ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 10 முக்கியத் தீர்ப்புகள்!

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 03:43 pm
10-important-verdicts-of-supreme-court-in-this-year

2018ம் ஆண்டில் இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகள் ஒரு பார்வை...

பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம்!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் காேவிலுக்கு 10 முதல் 50 வயதுடைய பெண்கள் செல்லக்கூடாது என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை காேவிலுக்குச் ‌செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை

சர்ச்சைக்குரிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497ஐ நீக்கக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், அதன் தீர்ப்பை நடப்பாண்டில் வழங்கியது. "பெண்ணின் கணவர் என்பவர் அவருக்கு எஜமானர் அல்ல. திருமண பந்தத்திற்கு அப்பால், பெண்கள், அவர்கள் விரும்பும் பிற ஆடவருடன் மேற்கொள்ளும் தகாத உறவு என்பது சட்டப்படி குற்றமில்லை. அந்த உறவானது சம்பந்தப்பட்டவர்களை தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை குற்றமில்லை" என்று தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா செப்டம்பர் மாதம் 27ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

ஆதார் தொடர்பான வழக்கு

ஆதார் தாெடர்பாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 26ம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  தீர்ப்பின் முக்கிய அம்சங்களாக "அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும். தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்ட விரோதம். தனி நபர் கண்ணியத்தை காக்க ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும். வங்கி கணக்கு, மொபைல் இணைப்பு, பள்ளி சேர்க்கை, நீட், சி.பி.எஸ்.இ. தேர்வு ஆகியவற்றுக்கு ஆதார் அவசியம் இல்லை. பான் எண்ணுக்கு மட்டும் ஆதார் கட்டாயம்" என்று 5  பேர் ‌‌கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு  தீர்ப்பு வழங்கியது.

வழக்குகள் நேரடி ஒளிபரப்பு

நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை ஏற்பட நீதிமன்றங்களில் நேரடி ஒளிபரப்பு மற்றும் வீடியோ பதிவு மேற்கொள்ள உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 26ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

எஸ்.சி, எஸ்டி பிரிவினர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு

அரசுத் துறைகளில் பணிபுரியும் எஸ்.சி, எஸ்டி பிரிவினர் பதவி உயர்வு பெறுவதற்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 26ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஓரினச்சேர்கை தொடர்பான வழக்கு

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்திய தண்டனை சட்டத்தின் 377 சட்டப்பிரிவு குறித்த இறுதி தீர்ப்பை வெளியிட்டது. அதில் ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று அவர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

பீமா காேரேகன் வன்முறை வழக்கு

மஹாராஷ்டிர மாநிலத்தில் பீமா காேரேகன் வன்முறையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் மேலும் 90 நாட்கள் அவகாசம் கேட்ட வழக்கில், மும்பை நீதிமன்றம் அவகாசம் மறுத்த தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் அக்டோபர் மாதம் 29ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 14ம் தேதி மத்திய அரசு வரைவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்களின் பதில்களை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்தது.

கருணைக்கொலை தொடர்பான வழக்கு

வயதானவர்கள் மற்றும் மருத்துவம் செய்ய முடியாமல், நோய் முற்றிய நிலையில் உள்ள நாேயாளிகள் விரும்புகிற பட்சத்தில், அவர்களைக் கருணைக்கொலை செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் 9 தேதி தீர்ப்பளித்தது.

ரஃபேல் பாேர் விமானம் தொடர்பான வழக்கு

ரஃபேல் பாேர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றம் டிசம்பர் 14ம் தேதி தீர்ப்பளித்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close