சொன்ன தேதியில் ஒழுங்கா சரணடைஞ்சுடுங்க! காங்கிரஸ் மூத்த தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 11:59 am
court-dismisses-sajjan-kumar-s-pela-seeking-more-time-to-surrender

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தாம், சரணடைவதற்கான காலகெடுவை நீட்டிக்க கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 1984 -இல், முன்னாள் பிரதமர்  இந்திரா காந்தியின் படுகொலையையடுத்து, டெல்லி கன்டோண்மென்ட் பகுதியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் அவர் வரும் 31-ஆம் தேதிக்குள் (டிசம்பர் 31 )  சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தத் தீ்ர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், தமது சொத்துகளை குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்தளிக்கவும் வசதியாக, தான் சரணடைவதற்கான காலகெடுவை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் எனக் கோரி சஜ்ஜன் குமார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் இவ்வளவு ஆண்டுகள் ஜாமீனில்தான் இருந்துள்ளார். தற்போது தீர்ப்பு வந்ததும், குடும்ப விஷயங்களை காரணங்காட்டி, சரணடைவதற்கு அவர் கூடுதல் அவகாசம் கேட்பது வியப்பாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close