சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கு: 22 பேரையும் விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 01:32 pm
sohrabuddin-sheikh-case-all-22-accused-acquitted

சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து, குஜராத் மாநிலத்தில் பெரிய அளவில்  மத கலவரங்களை தூண்டவும், அரசியல் தலைவர்களை கொலை செய்யவும்  சதித் திட்டம் தீட்டியதாக சொராபுதீன் ஷேக் உள்ளிட்டோரை கடந்த 2005-இல் குஜராத் மாநில போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில்,  போலீஸ் காவலில் இருந்த சொராபுதீன்  திடீரென இறந்ததையடுத்து, அவர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

"சொராபுதீன் உள்ளிட்டோரின் மரணத்துக்கு சதி திட்டம்  தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வழக்கை சந்தித்து வந்த 22 பேர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க 200-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் அரசு தரப்பு விசாரணை நடத்தியுள்ளது. 

இருப்பினும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை.  நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களும் போதுமானதாக இல்லை. மேலும், இந்த வழக்கில் 92 பேர் பிறர்சாட்சியம் அளித்துள்ளதற்கு அரசு தரப்பு எந்தவிதத்திலும் பொறுப்பாகாது" என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாட்சிகளை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close