நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்ய 2 வாரம் கெடு... காங்கிரஸுக்கு அடுத்த அடி!

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 02:40 pm
national-herald-case-delhi-high-court-dismisses-ajl-s-plea-challenging-eviction-order

காங்கிரசின் "நேஷனல் ஹெரால்டு" பத்திரிகையை பதிப்பித்து வந்த நிறுவனமான அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனம் (ஏஜெஎல்) டெல்லி ஹெரால்டு ஹவுஸ் வளாகத்தில் இருந்து கண்டிப்பாக காலி செய்துதான் ஆக வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், அதற்கு நீதிமன்றம் இரண்டு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 2011- 12-ஆம் ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கலை மறுஆய்வு செய்ய நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போதைய இந்தத் தீர்ப்பு காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனம், குத்தகை நிபந்தனைகளை  மீறி செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹெரால்டு  ஹவுல் வளாகத்திலிருந்து  அந்நிறுவனம் நவம்பர் 15 -ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று கடந்த அக்டோபர் 30 -ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஏஜெஎல் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட நீதிமன்றம்,  ஏஜெஎல் நிறுவனத்தை காலி செய்ய இரண்டு வாரம் அவகாசம் அளித்துள்ளது.

என்ன விதிமீறல்கள்:  புதுடெல்லி, பகதூர் ஷா ஜாஃபர் மார்க் பகுதியில், கடந்த 1963-ஆம் ஆண்டு ஹெரால்டு ஹவுஸ் எனும் ஆறடுக்கு  கட்டடம் கட்டடப்பட்டது. கட்டடத்தின் தரைகீழ் தளத்தையும் (பேஸ்மென்ட்), பிறவற்றில் ஏதாவதொரு தளத்தையும் பத்திரிகை பதிப்புக்கும், அதன் அலுவலகத்துக்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என குத்தகை நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகள் 2013- இல் கண்மூடித்தனமாக மீறப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும்,  2018 ஏப்ரலில் அரசு அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு பத்திரிகை அச்சகமோ, அச்சடிப்பதற்கான தாள்கள் உள்ளிட்ட எதுவும் இல்லாததும், அனைத்து தளங்களுகம் வர்த்தக பயன்பாடுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

பத்திரிகை அச்சகம் மற்றும் அலுவலகத்துக்காக பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டுள்ளதால், ஹெரால்டு ஹவுஸை விட்டு வெளியேற, ஏஜெஎல் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close