திக்விஜய் சிங் மீது ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 07:21 pm
non-bailable-warrant-against-digvijay-singh

அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால், காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீது ஹைதராபாத் நீதிமன்றம் ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் மீது, ஹைதராபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கிரிமினல் அவதூறு வழக்கில், அவர் இன்றும் ஆஜராகவில்லை. அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் இணைச்செயலாளர் ஹுசேன் அன்வர் தொடுத்த இந்த அவதூறு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் உள்ளதால், திக்விஜய் சிங் மீது பெயிலில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close