சீக்கியப் படுகொலை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் முறையீடு

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 03:41 pm
congress-leader-sajjan-kumar-appeal-to-sc-against-his-conviction

டெல்லி உயர்நீதிமன்றம் தனக்கு விதித்துள்ள ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா, அவரது பாதுகாவலர்களில் ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து தலைநகர் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் முன்னின்று நடத்தினர். அந்த கலவரத்தில் 3, 600 சீக்கியர்கள் வரை கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அத்தகைய தலைவர்களில் ஒருவரான சஜ்ஜன் குமார் மீது தொடுக்கப்பட்டிருந்த, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் செய்தது தொடர்பான வழக்கில், ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் அவருக்கு நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

தான் சரணடைவதற்கான காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டுமென, சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி, சஜ்ஜன் குமார் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட கமல்நாத்தும், சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடத்தியது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close