பாலியல் புகார்: ராணுவ அதிகாரியை பணிநீக்கம் செய்ய உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 07:44 pm
court-orders-dismissal-of-major-general-for-sexual-harassment-of-woman-officer

பாலியல் புகாருக்கு ஆளான ராணுவ உயரதிகாரியை பணிநீக்கம் செய்ய, ராணுவ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் வடகிழக்குப் பிரிவு படை தளபதியாக இருந்த அதிகாரி ஒருவர் மீது சக பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சண்டீகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த 6 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரி மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதாகக் கூறி, அவரை பணிநீக்கம் செய்ய ராணுவ நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் உயரதிகாரிகள் நிலையில் நிலவும் அதிகார போட்டியில், தான்  பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த அதிகாரி,  இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close