தனிநபர்களின் கணினியை கண்காணிப்பதா?: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 03:35 pm
pil-filed-against-mha-notification-allowing-10-agencies-to-conduct-surveillance

தனிநபரின் கணினி தகவல்கள் பரிமாற்றத்தை கண்காணிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதாகக் கூறி, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில், தேவைப்படும் தனிநபர்களின் கணினித் தகவல்களை கண்காணிக்க சிபிஐ, வருவாய் புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட பத்து அமைப்புகளுக்கு ஏற்கெனவே கடந்த 2010இல் வழங்கப்பட்ட அனுமதியை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் (மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரபல வழக்குரைஞர் எம்.எல்.சர்மா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதனை அவசர வழக்காக கருதி, உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இவர், சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close