அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: தொழிலதிபருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 04:18 pm
agusta-westland-case-ed-files-reply-against-accuse

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவுக்கு, நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத் துறை தமது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில், பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகரான  கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது அமலாக்கத் துறையின் காவலில் வைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் துபாயில் உள்ள தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் இதுவரை ஆஜராகவில்லை. மாறாக, உடல்நிலையை கருத்தில்கொண்டு தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அவர் டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை இன்று பதில் தாக்கல் செய்துள்ளது. அதில், "ராஜீவ் சக்சேனா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவருக்கு முன் ஜாமீன் அளிக்கக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 5- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close