அயாேத்தி வழக்கு- ஜனவரி 4ம்தேதி விசாரணை

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Dec, 2018 11:21 am
ayodha-issue-comes-to-trial-on-january-4th-in-supreme-court

அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமஜென்ம பூமி உரிமை வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவிலான வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லீலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் மேற்படி நிலத்தை சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி இந்த நிலம் யாருக்கு சொந்தமானது? என தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் முன்னர் நிராகரித்து விட்டது. இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என உரிமை கோரும் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் இம்மனு விசாரிக்கப்படும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close