சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்- சஜ்ஜன் குமார் சரணடைந்தார்

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Dec, 2018 05:40 pm
sajjan-kumar-surrenders-before-delhi-court


சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் இன்று டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சஜ்ஜன் குமார், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். மேலும் அவர் இம்மாத இறுதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்பளித்திருந்தது. இந்நிலையில் இன்று அவர் டெல்லி பெருநகர  நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

முன்னதாக தனது மகன்களுக்கு சொத்துக்களை பிரித்து அளிக்க வேண்டும் என கூறி ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இன்று அவர் டெல்லி பெருநகர  நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் மண்டோலி சிறைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close