ரஃபேல் விவகாரம்: சீராய்வு மனு தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 11:19 am
rafale-deal-revised-petition-in-sc

ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக் கோரி, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை கடந்த  மாதம் 14 -ஆம் தேதி தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு நீதிமன்றத்தி்ல் தவறான தகவல்களை அளித்துள்ளது. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பத்திரிகையாளர் அருண் ஷோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

newtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close