உச்சநீதிமன்றத்தில் இந்த மாதம் விசாரணைக்கு வரும் இரண்டு முக்கிய வழக்குகள் !

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 11:39 am
two-sensitive-cases-to-be-heard-in-supreme-court-this-month

அயோத்தி வழக்கு, சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனு ஆகிய இரண்டு முக்கிய விவகாரங்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த மாதத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

அயோத்தியில் உள்ள குறிப்பிட்ட இடம் தங்களுக்கு சொந்தம் என்று ராம ஜென்ம பூமி இயக்கத்தினரும், சன்னி வஃபு வாரியமும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, ராமர் கோயில் கட்டுவதற்காக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஹிந்துத்துவ இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அயோத்தி வழக்கை எந்த தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு நாளை மறுநாள் முடிவு செய்யவுள்ளது. அயோத்தி வழக்கை நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் இதற்கு முன்னர் கோரிக்கை வைத்திருந்தார். இத்தகைய சூழலில், உச்சநீதிமன்றம் என்ன முடிவை அறிவிக்கப் போகிறது என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரையில், அனைத்து வயது பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதை மறுஆய்வு செய்யக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தவுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close