ஸ்டெர்லைட் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 12:06 pm
tn-govt-approaches-sc-challenging-the-ngt-order-of-reopening-the-sterlite-copper-smelter-plant-in-thoothukudi

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

முன்னதாக, ஆலை நிர்வாகம் சார்பில் ஆலையை திறக்க அனுமதிக் கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விசாரிக்கவும்  உத்தரவிட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகள் தொடரலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கும், ஆய்வு குழுவுக்கு எதிராகவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 

இதையடுத்து தமிழக அரசு மீண்டும் சீராய்வு மனுவை தொடுத்திருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தடை செய்ய முடியாது என கூறி,  கடந்த நவம்பர் மாத இறுதியில் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close