போராட்டத்தை கைவிடுங்கள், தண்ணீர் பெற்றுத் தரப்படும்: உச்ச நீதிமன்றம் வேண்டுகோள்

  Padmapriya   | Last Modified : 04 Apr, 2018 09:37 pm

தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் காவிரி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய நேரத்தில் அமைக்காமல் நீதிமன்ற உத்தரவை மீறிய மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நிலையில்லாத சூழல் உருவாகியுள்ளது. போராட்டத்தில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பும் ஒன்றுகூடி அவரவர் தரப்பில் போட்ராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழக அரசும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் ஆஜராகும் தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் உமாபதியிடம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமிழக நிலவரம் குறித்து கேட்டறிந்தார். "தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? ஏன் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கிறது? மக்களும் தமிழக கட்சிகளும் போராட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, அங்கு அமைதி திரும்ப வேண்டும். வரும் 9-ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் பெற்று தரப்படும். இதை எனது சார்பில் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்" என தெரிவித்தார்.

மத்திய அரசு மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 9-ம் தேதி நடக்க உள்ளது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கோரிய போராட்டங்களும் அதன் வழி நடத்தப்படும் அரசியல் குழப்பங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், உச்ச நீதிமன்ற நீதிபதி இவ்வாறான கருத்தை வெளியிட்டிருப்பது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close