ஆண் -பெண்ணின் விருப்பப்பட்ட உறவு பாலியல் வன்கொடுமை ஆகாது! - உச்ச நீதிமன்றம் அதிரடி

  ஸ்ரீதர்   | Last Modified : 03 Jan, 2019 05:05 pm
consensual-sex-supreme-court-judgement

வயது வந்த ஆணும் பெண்ணும் உடன்பட்டு, பாலியல் உறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

மகாராஷ்ட்ராவில் மருத்துவர் ஒருவர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் செவிலியர் ஒருவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிக்ரி மற்றும் அப்துல் நசீர் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சில காலமாக இருவருக்கும் இடையே உறவு நீடித்து வந்ததால் அது  பாலியல் வன்கொடுமை அல்ல என்று தீர்ப்பு அளித்தனர். இருவரும் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டால், பாலியல் வன்கொடுமையாகவும் கருதப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close