அயோத்தி வழக்கில் வரும் 10ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 10:58 am
ayodhya-case-supreme-court-fixed-jan-10-as-date-of-hearing

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வரும் 10ம் தேதி விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டது.

அயோத்தியில் குறிப்பிட்ட இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று ராமஜென்ம பூமி இயக்கத்தினரும், சன்னி வஃபு வாரியமும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு இதற்கு முன்பு முன்வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

அதேசமயம், அயோத்தி வழக்கை, எந்த அமர்வு விசாரிப்பது என்பது குறித்து ஜனவரி 4ம் தேதி முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி, உச்சநீதிமன்ற தலைமையிலான அமர்வு முன்பாக அந்த விவகாரம் இன்று மீண்டும் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும், 10ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையிலும் அயோத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close