நேஷனல் ஹெரால்டு வழக்கு: அசோசியேடட் ஜெர்னல்ஸ் மேல்முறையீடு

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 02:34 pm

national-herald-case-ajl-appeal-in-delhi-high-court

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை காலி செய்ய வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம்(ஏஜெஎல்), குத்தகை நிபந்தனைகளை  மீறி செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹெரால்டு  ஹவுல் வளாகத்திலிருந்து அந்நிறுவனம் நவம்பர் 15 -ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று, கடந்த ஆண்டு அக்டோபர் 30 -ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஏஜெஎல் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த டிசம்பர் 21 -ஆம் தேதி உத்தரவிட்ட தனி நீதிபதி, இடத்தை காலி செய்ய மனுதாரருக்கு  இரண்டு வாரம் அவகாசம் அளித்திருந்தது.

இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம்,  டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.