ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம்- தடை விதிக்க கோரி மனு

  ஸ்ரீதர்   | Last Modified : 06 Jan, 2019 05:03 pm
the-accidental-prime-minster-petition-filed-to-ban

சமீபத்தில் வெளியான த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற படத்திற்கு தடை விதிக்க கோரி டெல்லியை சேர்ந்த பூஜா மஹாஜன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் அனுபம் கெர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ளார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இப்படம் வெளியாகியுள்ளாது.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த பூஜா மஹாஜன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தில் அரசியல் பின்னணி உள்ளது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் நடக்க போகும் நிலையில் இத்தகைய படங்கள் மக்களை மூளை சலவை செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close