அயோத்தி வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவிப்பு

  விசேஷா   | Last Modified : 08 Jan, 2019 06:27 pm
ayodhya-case-will-be-hear-on-10th-jan

 

அயோத்தி வழக்கை, தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை, ராமஜென்ம பூமி என்ற பெயரில், ஹிந்து அமைப்பினர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த இடத்தில், ஹிந்து கடவுளான ராமர் கோவில் கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். 

ஏற்கனவே ராமர் கோவில் இருந்த இடத்தில், 16ம் நுாற்றாண்டில், மொகலாய மன்னர் பாபர் ஆட்சி காலத்தில், அந்த கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது. 

இந்நிலையில், ராமஜென்ம பூமியாக கருதப்படும் இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை, 1992ல், ஹிந்துத்வா அமைப்பினர் இடிlத்துத் தள்ளினர். முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் அந்த இடத்தை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த அமர்வில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், யு.யு.லலித், சந்திரசூட், ரமணா, பாப்தே ஆகியோர் அடங்குவர். இந்த வழக்கின் விசாரணையானது, இம்மாதம் 10ஆம் தேதி முதல் இறுதி விசாரணை வரை தினந்தோறும் நடைபெறும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close