சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை: ஜோத்பூர் சிறையில் அடைக்கப்படுகிறார்

  Padmapriya   | Last Modified : 05 Apr, 2018 03:39 pm

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் 1998–ம் ஆண்டு ஜோத்பூர் அருகே நடைபெற்ற ‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற படப்பிடிப்பின் போது, நடுஇரவில் காட்டுக்குள் வேட்டையாட சென்று அபூர்வமான இரண்டு மான்களை சுட்டு தள்ளியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் சல்மான்கான், சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து வந்த ஜோத்பூர் கிளை நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு 7 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ராஜஸ்தான் அரசு இதனை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இவ்வழக்கினை தொடர்ந்து விசாரித்து வந்த ஜோத்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சல்மான் குற்றவாளி என அறிவித்துள்ளது.

மற்றவர்கள் விடுவிப்பு மேலும், சயீப் அலிகான் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்டவர்களை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு குறித்து நீதிபதி அறிவிக்கையில், சல்மான் கானுக்கு குற்றம்புரிவதே வாடிக்கை என கண்டிப்பாகத் தெரிவித்தார்.

தீர்ப்பு வெளியானதையொட்டி சல்மான் கான் தனது பாதுகாவலருடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். தண்டனை அறிவிக்கப்பட்ட பின், அவர் நேராக ஜோத்பூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close