‛ஹிந்துத்வா’ வார்த்தைக்கு விளக்கம் கோரி வழக்கு : உடனடியாக விசாரிக்க சுப்ரீம் காேர்ட் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 11:36 am
supreme-court-on-hindutwa-case

 

‛ஹிந்துத்வா’ என்ற வார்த்தை எந்த அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது என்பதை விளக்க கோரிய மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

‛ஹிந்துத்வா’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? அது எந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும், மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகோய் கூறியதாவது:

எந்த மனுவை எப்போது விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்திற்கு தெரியும். 
முக்கியத்துவத்தின் அடிப்படையில் மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படும்.

 தற்போது, இந்த மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது. நேரம் கிடைக்கும் போது இந்த மனுவை கோர்ட் விசாரிக்கும். 

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close