தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் பட வழக்கு: கைவிரித்த உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 03:03 pm
supreme-court-denies-urgent-hearing-on-ban-on-the-release-of-trailer-of-the-accidental-prime-minister

"தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" திரைப்படம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக கருத உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியானது.

இதில், சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, டிரெய்லருக்கு  தடைவிதிக்க வேண்டுமென  டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டுமென்ற காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம் நாடு முழுவதும் நாளைக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close