இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக வழக்கு

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 05:23 pm
plea-against-reservation-bill

 

நாட்டின் அனைத்து பிரிவினரையும் முன்னேற்றும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு பெறுவோர் பாதிக்கப்படாத வகையிலும், இதுவரை எந்த வித இட ஒதுக்கீடும் பெறாத, பொருளாதாரத்தில் பின் தங்கியாேருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையிலும், மத்திய அரசு சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது.
இந்த மசோதாவுக்கு, பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததால், அடுத்ததாக, இதற்கு சட்ட வடிவம் தந்து, அமல்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து, சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு மற்றும் கவுசல்காந்த் மிஸ்ரா ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close