போலி சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 03:35 pm
ram-rahim-is-a-accused-court-verdict-release

.

 

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம், பத்திரிகையாளர் கொலை வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 
பஞ்சாப், ஹரியானாவில் ஆசிரமங்களை நிறுவி நடத்தி வந்த போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம்,51, தன் ஆசிரமத்திற்கு வந்த பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு முன், பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற வழக்கில், ராம் ரஹீம் உட்பட, நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தவழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட், ராம் ரஹீம் உட்பட, நான்கு பேரையும் குற்றவாளி என அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விபரம், வரும், 17ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close