சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீதான வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் கெடு!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 01:03 pm
delhi-hc-refuses-to-quash-fir-against-asthana

சிபிஐ சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை 10 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு டெல்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு, சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவை, தீயணைப்புத் துறைக்கு மாற்றி, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தன் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, ராகேஷ் அஸ்தானா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அதில், "தன் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில், சட்டத்துக்கு புறம்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என அஸ்தானா குறிப்பிட்டிருந்தார்.

அஸ்தானாவின் இதுபோன்ற வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி நஜீம் வாசீர், "சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தான். மனுதாரர் சிபிஐ அதிகாரி என்பதாலேயே அவரது கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்க முடியாது. எனவே, அவர் மீதான வழக்கை சிபிஐ இரண்டரை மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close