ரத யாத்திரை கூடாது: பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 04:06 pm
no-bjp-rath-yatra-in-bengal-for-now-supreme-court

மேற்கு வங்கத்தில் தற்போதைக்கு பாஜக ரத யாத்திரை மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இம்மாதம் மூன்று வெவ்வேறு தேதிகளில் ரத யாத்திரை நடத்த பாஜக  திட்டமிட்டிருந்தது. ஆனால், இதனால் மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு பாதிக்கும் எனக் கூறி, இதற்கு அனுமதி அளிக்க அம்மாநில அரசு மறுத்துவிட்டது.

ரத யாத்திரைக்கு அனுமதிக்க உத்தரவிடக் கோரி, பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கையும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்காததற்கு மேற்கு வங்க அரசு கூறும் காரணங்களை கருத்தில் கொள்ளலாம் இருக்க முடியாது. எனவே, அங்கு தற்போதைக்கு பாஜக ரத யாத்திரை  மேற்கொள்ளக் கூடாது.

கட்சி பேரணிகள், பொதுக்கூட்டங்களை  வேண்டுமானால்  நடத்திக் கொள்ளலாம். ரதயாத்திரை திட்டம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close