சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநராக பதவி வகித்து வந்த அலோக் வர்மா, அவரது பணியிட மாறுதலை ஏற்காமல், தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சிபிஐ இயக்குநர் நியமிக்கப்படும் வரை நாகேஸ்வர ராவ் தற்காலிக இயக்குநராக தொடர்வார் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 11ஆம் தேதி நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், ராகேஸ்வர ராவ் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னார்வ அமைப்பு சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிரந்தர சிபிஐ இயக்குநரை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்துள்ள மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in