உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு கடிதம்

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 02:12 pm
retired-justice-kailash-gambhir-has-written-to-president-ram-nath-kovind

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளான சஞ்சீவ் கண்ணா, தினேஷ் மகேஸ்வரியை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கைலாஷ் காம்பீர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "பணி மூப்பு அடிப்படையில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ராஜேந்திர மேனன், நீதிபதி பிரதீப் நந்த்ரஜோக் ஆகியோர்தான் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.  

மாறாக நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தினேஷ் மகேஸ்வரி இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளை கையாண்டு வரும் நிலையில்,  அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close