வாட்ஸ்அப் நிதி சேவை விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 03:01 pm
whatsapp-payment-service-matter-sc-order-to-rbi

ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடிதான், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள், நிதி தொடர்பான சேவைகளை வழங்கி வருகின்றனவா? என்பதை உறுதி செய்யுமாறு ஆர்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றம் மற்றும் நம்பத்தன்மைக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பு, நிதி பரிவர்த்தனை சேவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில், உள்நாட்டில் சொத்து வரி செலுத்தப்படாமல் வரி ஏய்ப்பு செய்வோர் குறித்தும், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிதி பரிவர்த்தனை சேவையை வழங்க ஆர்பிஐ அனுமதி அளிப்பது குறித்தும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 மேலும், இச்சேவையில் ஏற்படும் குறைகளை களைய, இந்தியாவிலேயே குறைதீர் அதிகாரிகளை பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 15 -ஆம் தேதிக்குள், வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து நிதி பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனங்களும், தங்களின் சேவையை பெறும் அனைவரின் தரவுகளையும் தங்கள் வசம் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.

மேலும் இந்த வழக்கையடுத்து, தங்களின் நிதி சேவை தொடர்பாக, குறைதீர் அதிகாரியை வாட்ஸ்அப் நிறுவனம் நியமித்தது. 

ஆனால், "இந்தியாவில் இந்நிறுவனம் மேற்கொள்ளும் சேவைக்காக, அமெரிக்காவில் குறைதீர் அதிகாரியை நியமிப்பது சரியல்ல. இதனால், வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிதி சேவையை பயன்படுத்துவோர் வரி ஏய்ப்பு செய்யவும், இச்சேவையை பயன்படுத்துவோரின் தகவல்கள் திருடப்படவும் வாய்ப்புள்ளது" என நேற்று இவ்வழக்கு விசாரணையின்போது  மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "இவ்வழக்கில்  மற்றொரு மனுதாரராக சேர்க்கப்படும் ஆர்பிஐ, தனது சுற்றறிக்கையில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படிதான் வாட்ஸ்அப் உள்ளிட்ட  நிறுவனங்கள் நிதி தொடர்பான சேவையை வழங்குகின்றனவா? என்பதை உறுதிசெய்ய வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close