அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 03:42 pm
why-no-human-rights-court-yet-sc-asks-to-all-states

பெரும்பாலான மாநிலங்களில், மாவட்டங்கள் அளவில் மனித உரிமைகள் ஆணையம் இதுவரை அமைக்கப்படாதது ஏன் என்பது குறித்து, அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தி்ற்குள்ளும் மனித உரிமைகள் ஆணையம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 30-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் மாவட்ட அளவில் மனித உரிமைகள் ஆணையங்கள் அமைக்கப்படவில்லை.

இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்ஏ போடே, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "மாவட்ட அளவில் மனித உரிமைகள் ஆணையத்தை அமைக்கும் விஷயத்தில் பெரும்பாலான மாநில அரசுகள், போதுமான ஆர்வம் காட்டாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களும் உரிய அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை  2 மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close